ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’ !

பல வெற்றி படங்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், நதியட்வாலா கிராண்ட்சன் என்டர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிச்சோரே’ . இந்தப் படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி இருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வெளியீடு செய்கிறது.

கல்லூரி வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வரும் ‘சிச்சோரே’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர், வருண் சர்மா, தாஹிர் ராஜ் பாசின், நவீன் பாலிஷெட்டி, துஷார் பாண்டே, சஹர்ஷ்குமார் சுக்லா மற்றும் பிரதீக் பபர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் .கல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுடன் தங்கும் கல்லூரி விடுதியில் ஏற்படும் சந்தோஷம், நட்பு என அனைத்தையும் உள்ளடக்கி இந்தப் படம் உருவாகியுள்ளது.

கல்லூரி நினைவுகளை இசையால் உணர வைக்கிறார் இசைமைப்பளார்  ப்ரிதம். நம் கண்முன்னே கல்லூரி வாழ்க்கையை அழகாக ஒளிப்பதிவு செய்து படமாக்கியிருக்கிறார் அமலேண்டு சௌத்ரி, சாரு ஸ்ரீ ராய் இந்தப் படத்தை எடிட்டிங் செய்துள்ளார். இந்தப் படத்தினை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம்  செப்டம்பர் 6ஆம் வெளியீடு செய்கிறது .தற்போது இந்தப் படத்தின் ஒரு சிறப்பு முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது .

Chhichhore Trailer – https://youtu.be/VpGlHL9SniM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*