அசுரகுரு – விமர்சனம்

ஜேஎஸ்பி சதீஷ் தயாரிப்பில் ராஜ் தீப் இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபு, ஜெகன், மஹிமா நம்பியார், சுப்பாராஜு, குமாரவேல், யோகி பாபு நடித்திருக்கின்றனர். இசை: கணேஷ் ராகவேந்திரா; ஒளிப்பதிவு: ராமலிங்கம்; படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்.

கதை: 

படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு, ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலைபார்த்தபடியே, மிகப் பெரிய கொள்ளைகளில் ஈடுபடுகிறார். அப்படி ஒரு கொள்ளையில் ஈடுபடும்போது, ஒரு போதைப் பொருள் தாதாவின் பணத்தையும் திருடிவிட, சிக்கல் ஏற்படுகிறது. உண்மை சம்பவம் ரயியில் நடந்த கொள்ளையை போல இந்த படத்திலும் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது.இதையடுத்து, காவல்துறை, தனியார் துப்பறிவாளர், போதைப் பொருள் தாதா என எல்லோரும் கதாநாயகனைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தையெல்லாம் விக்ரம் பிரபு என்ன செய்கிறார்? இதனால் என்ன நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

நடிப்பு: 

விக்ரம் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்துள்ளார்.மஹிமா நம்பியார் சும்மா டூயட் பாடுவதற்கு மட்டும் வந்து செல்லாமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.யோகி பாபு சுவருகிற காட்சிகளில் எல்லாம் காமெடியும் வந்து போகிறது.விக்ரம் பிரபுவின் நண்பராக வரும் ஜகன், தன் பாத்திரத்தை உணர்ந்து பங்காற்றியிருக்கிறார். ஒரு நடிகராகப் படத்தில் தேறுவது இவர் மட்டுமே.

இயக்கம்:

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கொள்ளையர்களாக இருந்தாலே, அதற்கு பின்னாள் ஒரே மாதிரியான காரணங்கள் தான் இருக்கும். அதாவது, அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த படத்தில் அப்படி ஒரு ரூட்டை தவிர்த்துவிட்டு, வித்தியாசமான கரு ஒன்றை இயக்குநர் ஏ.ராஜ்தீப் பிடித்திருக்கிறார்.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் பாடல்கள், சிமோன் கிங்கின் பின்னணி இசை. அனைத்தும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மொத்தத்தில் இந்த அசுரகுரு வேகம் கொஞ்சம் கம்மி

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*