உச்சத்தை தொட்ட பிரபாஸின் “சாஹோ” 4 நாட்களில் 330 கோடி வசூல்!

இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்க்கிறது பிரபாஸின் “சாஹோ”.
பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும், பிரபல்யமும் அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதமும் இந்த அளப்பரிய வெற்றிக்கு காரணியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பிரபாஸின் வெறித்தனமான ரசிகர்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

பாகுபலி படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் சாதனைகள் படைத்து வருகிறது. இதனை டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது. வசூலில் புயலாய் பாய்ந்த “சாஹோ” இந்தியாவில் அவஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்தது. விநாயகர்சதுர்த்தி தினமான நேற்றைய திங்கள் கிழமையிலும் 14.20 கோடியை குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து 330 கோடியை குவித்துள்ளது.

நடிகர் பிரபாஸின் பாலிவுட் அறிமுகமாக அமைந்த “சாஹோ” இந்தியில் வசூலை அள்ளி குவித்து ஒரு மிகச்சிறந்த உச்ச சாதனை படைத்த அறிமுகமாக  மாறியுள்ளது. இதன் மூலம் தெலுங்கு நடிகராக இருந்த டோலிவுட் டார்லிங் பிரபாஸ் இந்தியா முழுமைக்குமான இந்திய  நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், ஜங்கி பாண்டே, மந்த்ரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அருண் விஜய், முரளி சர்மா முதலான மிகப்பெரும் இந்திய நடச்த்திரங்கள் இணைந்து நடிப்பில் கலக்க்கியுள்ளனர்.

இந்தியாவின் மிகபிரமாண்டமான ஆக்‌ஷன் திரில்லரான சாஹோ படத்தை T series வழங்க UV creations தயாரித்துள்ளனர்.  இப்படம் மூலம் பிரபல இந்திய நட்சத்திரமாக மாறியுள்ள பிரபாஸின் ரசிகர்களால் வந்திருக்கும்  “சாஹோ”  ரசிகர்களால் கொண்டாடப்பட்டு உலகளவில் சாதனை படைத்து வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*