என் தலைவனை அவர் தவறாக பேசினால் நான் திரும்ப பேசுவேன் – லாரன்ஸ் தர்பார் இசை வெளியீட்டு விழா

தலைவரின் வழி தனி வழி … சும்மா கிழி பாடல் மிகவும் அருமை.

சும்மா கிழி பாடலின் ‘சீண்டாதே’ என்ற வரி ரொம்ப பிடித்தது கேட்கும்போதே தியேட்டரில் போய் விசிலடிக்க ஆசையாக இருந்தது.

தனது படங்களில் நல்ல கருத்தை சொல்பவர் முருகதாஸ் தலைவருடன் இணைந்து நல்ல கருத்தை சொல்லியிருப்பார் என நம்புகிறேன்.

தர்பார் பாட்ஷா வை வெல்லுமென்று எதிர்பார்க்கிறேன் . முதல் போஸ்டரை பார்த்தபோது தலைவருக்கு வயது 70ஆ 25ஆ என்று தோன்றியது.

கடைசி வரிசையில் அமர வேண்டிய நான் முதல் வரிசையில் அமர்ந்துள்ளதற்கு காரணம் ரஜினிதான்.

சிறு வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் , இருவரும் இப்போது இணைந்திருப்பதை பார்க்கும்போது ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்று தோன்றுகிறது

அதிசயம் அற்புதம் . இந்த இரண்டு வார்த்தையால் தமிழ்நாடே அதிர்ந்து விட்டது. பல காலமாக இருக்கும் வார்த்தை ஆனால் அவர் சொன்னவுடன் அதற்கு மதிப்பு கூடி விட்டது. அதியசயம் , பொக்கிசம் ரஜினிதான் .

கடவுள் காரண காரியத்தோடுதான் அனைவரையும் படைப்பார் , ரஜினி படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு.

கீதை குரான் பைபில் அமைதி போதிக்கப்பட்டுள்ளது. அமைதிக்காக குருவை தேடி செல்வோம் , அவர் தியானம் செய்ய சொல்லுவார் . இறுதியில் நீ உடம்பில்லை , ஆத்மா என்பார்கள். இறுதியாக சொல் செயலால் யாருக்கும் துரோகம் பண்ணாதே , கடமையை சரியாக செய் என்பார்கள். இவற்றை நமக்கு சொல்ல வந்தவர்தான் ரஜினி . ஒருவரின் வாழ்க்கை பலரின் வாழ்க்கையை மாற்றும் .

திருவண்ணாமலை கோயிலுக்கு அவர் விளக்கு வாங்கி கொடுத்ததைப் பார்த்து எனக்கு கோயில் கட்டத் தோன்றியது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுபவர் ரஜினி.

அவர் சினிமாவில் கிடைத்த குரு . இதுவரை யாரையும் அவர் திட்டியதில்லை , யாருக்கும் துரோகம் செய்ததில்லை.

நூறாவது படமாக ‘ராகவேந்திராவை’ ரஜினி எடுத்தது ஏன். ஆன்மிகம்தான் அதற்கு காரணம் .

பாபா பட நட்டத்தால் பணத்தை திருப்பி கொடுத்தார் . வேறு யார் செய்வார்கள் இப்படி .

நான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த மேடையில் பல அரசியல் தலைவர்களையும் ரஜினி புகழ்ந்தார். ஸ்டாலின் முதல் இன்னொரு தலைவர் வரை…ஆனால் அவர் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை.

அவர் இரு வார்த்தை பேசினாலே அது செய்திதான். அவருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள் வந்த பின் தெரியும் . வயது அதிகம் என்கிறார்கள் அவர் நடக்கும் போது தெரியும். முன்னரே ஏன் வரவில்லை என்கிறார்கள் , அப்போது அவருக்கு விருப்பமில்லை .

இந்த வயதில் அவருக்கு பணம் , புகழ் தேவையில்லை ,மோடியே நேரில் வந்து பார்க்கிறார் அவரை. பப்ளிசிட்டியின் பெயரே சூப்பர் ஸ்டார்தான் , மக்களுக்கு உழைக்க வருகிறார் . தன் குடும்பத்தை இங்கு இரண்டாவது வரசையில் அமர்த்தியுள்ளார் நாங்கள் முதல் வரிசையில் .

” உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் ” எனும் வார்த்தைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் ரஜினி .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*