கடாரம் கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற “விகாஸ் ஸ்ரீவஸ்தவ்”

விக்ரம் நடித்த காடாரம் கொண்டான் படத்தின் மூலம் தமிழில்  வில்லனாக அறிமுகமானவர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். பீகாரில் பிறந்த இவர் வளர்ந்தது உத்தரபிரதேச மாநிலத்தில், சிறுவயதிலேயே நாடக குழுவில் நடிக்கத் தொடங்கினார். கல்லூரி படிப்பிற்கு பின் மும்பையில் தினேஷ் தாகூர் நிபுணத்துவ நாடகக் குழுவில் சேர்ந்தார். பின் 15 ஆண்டுகள் தியேட்டர் அனுபவம் பெற்றவர்.

மேலும் இசைத் துறையிலும் இவர் பணியாற்றியிருக்கிறார்.  ‘ஏகாந்த் பாபனி’ இயக்கிய குறும்படத்தில் நடித்து 2005 இல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.  கான்ட்ராக்ட், ஃபூக் 2 போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இவர் நடித்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’, டர்ட்டி பிக்சரில், ‘பேமஸ் தலாஷ்’  ‘ஸ்பெஷல் 26’, ஏக் தி தயான், தூம் 3 மற்றும் ‘கபார் இஸ் பேக் படங்கள் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

”சோலார் எக்லிப்ஸ் ”  டெப்த் ஆஃப் என்ற பாடல் ஆல்பத்திற்கான பாடலாசிரியராக இசைத் துறையிலும் பணியாற்றினார். விகாஸ் 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். ஆகையால் எந்த மொழியையும் பேசுவதற்கும் நடிப்பதற்கும் அவருக்கு மிகவும் இயல்பான ஒன்று. 6 சூப்பர் ஹிட் இந்திய படங்களுக்குப் பிறகு அவர் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

சில ஹாலிவுட் இயக்குநர்கள், ஈரானிய இயக்குநர்கள், இத்தாலிய இயக்குநர்கள் மற்றும் ஸ்பேனிஷ் திரைப்பட இயக்குநர்கள் உட்பட மிகவும் பிரபலமான பாலிவுட் திரைப்பட இயக்குநர்களுடனும் பணியாற்றி இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*