காசு மேல காசு – விமர்சனம்

ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் P.ஹரிஹரன் தயாரிப்பில் மயில்சாமி புதுமுகங்கள் ஷாருக்,காயத்ரி இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் நடித்து வெளிவந்துள்ள காமெடி திரைப்படம் தான் “காசு மேலே காசு”.

இப்படத்தின் கதை மகனை நல்ல பணக்கார பெண்ணை காதலிக்க வைத்து அதன் மூலம் பெரிய பணக்காரராக மாற நினைக்கும் மயில்சாமியின் நிலை என்ன ஆனது என்பதை குறைந்த பொருட்செலவில் காமெடியாக சொல்லி இருக்கும் படம் தான் காசு மேல காசு.

நாயகனாக ஷாருக் ,நாயகியாய் காயத்ரி இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தங்களால் எந்த அளவு சிறப்பாக பண்ண முடியுமோ பண்ணி இருக்கிறார்கள் இனி வரும் காலங்களில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் ஜொலிக்கலாம்

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் மயில்சாமி மற்றும் அந்த பிச்சை காரர் தான் இருவரும் போட்டி போட்டு நடித்து படத்தை சரிவில் இருந்து தூக்கி நிறுத்துகின்றனர் முதல் பாதியைவிட படத்தின் இரண்டாம் பாதி தான் காமெடி கைதட்டல் வாங்குகிறது

பாண்டியனின் இசையில் பாடல் பின்னணி இசை சுமார் ராகம் தான்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருப்பவர் கே.எஸ்.பழனி காமெடி வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் வாங்குகின்றன இன்னும் கொஞ்சம் வசனத்தில் கவனம் செலுத்தி இருந்தால் காமெடி இன்னும் நன்றாக வந்து இருக்கும்

சரியான பொருட்செலவும் நட்சத்திர தேர்வும் இருந்து இன்னும் சிறப்பாக பண்ணி இருந்தால் இந்த காசு மேல காசு இயக்குனர் ராஜேஷ் படங்களை போன்று காமெடி பட வரிசையில் வந்து இருக்கும் , இனி பண்ணும் படங்களில் இந்த குறைகளை சரி செய்தால் இயக்குனர் பழனிக்கு தமிழ் சினிமாவில் காமெடி இயக்குனர்கள் வரிசையில் நல்ல இடம் உண்டு கண்டிப்பாக .

மொத்தத்தில் இந்த “காசு மேல காசு” புஷ்வாணமாகி போன காமெடி சரவெடி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*