காலக்கூத்து – விமர்சனம்

இரண்டு இணைபிரியா நண்பர்களின் காதல் கதையை 80 களின் பாணியில் சொல்லி இருக்கும் படமே காலக்கூத்து

கலையரசன், பிரசன்னா இருவரும் சிறு வயது உயிர் நண்பர்கள். தாய் தந்தை இல்லாத பிரசன்னா, தன்னை போலவே தாயை இழந்த கலையரசன் மீது சிறுவயதில் அனுதாபம் வர, அந்த அனுதாபம் நட்பாக மாறியது. இந்நிலையில் கலையரசன் தன்ஷிகாவையும், பிரசன்னா ஸ்ருஷ்டி டாங்கியையும் காதலிக்கின்றனர். இருவரின் காதலிலும் சிக்கல் வந்தது. இந்த சிக்கல்களில் இருந்து இருவரும் மீண்டார்களா? அல்லது மாண்டார்களா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

இதுவரை கலையரசன் நடித்த படங்கள் அனைத்திலும் சோடை போனதில்லை என்பது தெரிந்ததே. அதேபோல் இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பை தந்துள்ளார். நண்பனிடம் கோபப்படுதல், காதலி தன்ஷிகாவிடம் கொஞ்சல் மற்றும் கிண்டல், ஆகிய காட்சிகளில் கலையரசன் ஸ்கோர் செய்கிறார்.

பிரசன்னாவுக்கு நல்ல கேரக்டர்தான் என்றாலும் அவருக்கேற்ற கேரக்டர் இல்லை என்பது ஒரு மைனஸ். இந்த கேரக்டருக்கு ஒரு இளம் நடிகர் அலல்து புதுமுக நடிகர்தான் பொருத்தமாக இருந்திருப்பார்.

தன்ஷிகாவுக்கு கபாலி’க்கு பின்னர் குறிப்பிட்டு சொல்லும்படியான படம். கிளைமாக்ஸில் விருது வாங்கும் அளவுக்கு மிக இயல்பாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் திருப்தி தரும் வகையில் அவரது நடிப்பு இருந்தது.

ஜஸ்டின் பிரபாகரன் இசை பாடல்கள் சுமார் ராகம் தான் பின்னணி இசை பெரிதாக கைகொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும் சங்கரின் கேமிரா மற்றும் செல்வா படத்தொகுப்பு படத்திற்கு ஓகே ரகம்

இயக்குனர் நாகராஜன் படத்தை முதலில் இருந்து மெதுவாகவே நகர்த்தி செல்வது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ,மேலும் இது தான் இறுதியில் நடக்கப்போகிறது என சின்ன குழந்தைக்கு கூட தெரிந்துவிடும் அளவிற்கு அவ்வளவு பெரிய ஓட்டை திரைக்கதையில்.

80 களில் வரவேண்டிய படம் கொஞ்சம் காலம் தாழ்த்தி வந்துள்ளது போன்று உள்ளது இந்த காலக்கூத்து

காலக்கூத்து பொறுமையின் சோதனை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*