காலேஜ் குமார் – திரைவிமர்சனம்

நடிகர்கள்:

பிரபு ,மதுபாலா, ராகுல் விஜய் ,பிரியா வட்லமணி, நாசர் ,மனோபாலா ,சாம்ஸ்

கதை :

நீண்ட கால நண்பரான அவினாஷ் அதிகம் படிக்க வசதியில்லாத பிரபுவை தன் அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான நட்பு முறிய, படிக்காதவர் என்ற காரணத்தை வைத்தே பிரபுவை அவினாஷ் அசிங்கப்படுத்த, இதனால் கோவம் கொண்ட பிரபு தன மகனை ஆடிட்டர் ஆக மாற்றிக்காட்டுவதாக அவரிடம் சபதம் செய்கிறார். ஆனால், அவர் மகனான ராகுலுக்கு படிப்போ வரவில்லை இருப்பினும் தன் தந்தைக்காக தான் கல்லூரியில் முதல் மாணவன் என பொய் சொல்லிவிடுகிறார் ஒரு கட்டத்தில் இந்த உண்மை பிரபுவுக்கு தெரியவர பின்பு என்ன நடந்தது யார் ஆடிட்டர் ஆனார்கள் என்பதே மீதி கதை.??

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபு மதுபாலா ஜோடி அருமை அந்த குறும்பும் சுட்டித்தனமும் பிரபுவிடம் அப்படியே உள்ளது அப்பாவாக தன நடிப்பை சிறப்பாக செய்துள்ளார் , கல்லூரியில் இவர் செய்யும் சேட்டையை திரையரங்கில் சென்று பாருங்கள் மதுபாலா அம்மா வேடத்தில் கனகச்சிதம்,பிரபுவின் மகனாக நடித்திருக்கும் ‘ராகுல் விஜய்’ யின் தோற்றமும், நடிப்பும் நன்று. சண்டைக் காட்சியிலும், நடனத்திலும் அதிவேகமாக இயங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.ராகுல் விஜய்யின் ஜோடியாகவும், அவினாஷின் மகளாகவும் வரும் நாயகி பிரியா வட்லமணி ஒரு மாடல் போல அழகாக வந்து போகிறார்.

பாடல்கள் பின்னணி இசை ஓகே ரகம் என்றாலும் குரு பிரசாத்தின் ஒளிப்பதிவு மிக அருமை நாசர் , மனோபாலா சாம்ஸ் கதாபாத்திரங்கள் படத்திற்கு துணை நிற்கின்றன

படிக்கிறது ஈஸி என சொல்லும் பெற்றோர்களும்,படித்தால் தான எங்க கஷ்டம் தெரியும் என சொல்லும் பிள்ளைகளும், பெற்றோரின் கஷ்டங்கள் தெரியாமல் அவர்களை உதாசீனபடுத்தும் பிள்ளைகளும் இந்த தேர்வு சமயத்தில் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

மொத்தத்தில் இந்த காலேஜ் குமார் படத்தின் கருத்து “சொல்றது ஈஸி செய்றது கஷ்டம் அனால் இஷ்டப்பட்டு செய்தால் அனைத்தும் ஈஸி தான்“.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*