கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !

சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின்  “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியசாமான உருவாக்கத்தில்  டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் நடக்கும் மோதலையும், படத்தின் தன்மையையும் அட்டகாசமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது டீஸர்.

ஒருபுறம் டீஸருக்கு குவியும் வாழ்த்துக்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அதே நேரம், இணையத்தில் யூடுயூப் தளத்தில் 2.9 மில்லியன் பார்வைகளை கடந்தும், அதைவிட பெரும் கொண்டாட்டமாக  டீஸர் பார்த்து, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்த  ஆசிர்வாதம் கொண்ட வாழ்த்துகளும்  படக்குழுவை சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

மாஃபியா படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றது. படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளை தயாரிப்பு நிறுவனம் மிக  விரைவில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. லைகா நிறுவனம்  தயாரித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா உடன் ப்ரியா பவானி சங்கர் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பெஜாய் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*