சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு பத்து நாட்களுக்கு முன்பான ஓர் அறிவிப்பு!

பல மாதங்கள் கடின உழைப்பு, திட்டமிடல், நிலைப்பாடுகளுக்குப்
பின்பு உலகளவிலுள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல குழுக்கள் இணைந்து, வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சந்திக்கவிருக்கிறோம். கோப்பைக்கான வெற்றியாளரைத் தீர்மானிப்பது மட்டும் இந்த தொடர் போட்டியின் நோக்கமாக இல்லாமல் அனைவரையும் உட்படுத்தும் சிறப்பு ஒலிம்பிக்கின் கொள்கையை பறைசாற்றுவதையே முக்கிய நோக்கமாக வைத்திருக்கிறோம் .

 

இந்த மாபெரும் நிகழ்விற்கு 10 நாட்களே உள்ள நிலையில், ஜூலை 24 தேதியன்று,மெரினாவிலுள்ள ரமடாவில், SOIFCயின் நிர்வாகக் குழு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் அந்த நான்கு நாட்கள் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட ஒலிம்பிக் நிகழ்ச்சிகளைப் பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் அறிவிக்கப்படும்.

மேலும் அந்நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்களும் அந்நிர்வாகக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

ஆகஸ்ட் 3, மாலை 4.30 மணி முதல், திறப்பு விழா ஆரம்பம். இடம் : நேரு உள்விளையாட்டு அரங்கம்

மதிப்பிற்குரிய உடல்நல மற்றும் குடும்பநல மாநில அமைச்சர்
திரு. அஸ்வினி குமார் சௌபி

 

பத்ம விபூஷண் விருதாளர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர்
மேஸ்ட்ரோ திரு. இளையராஜா

 

கௌரவ விருந்தினராக,
ஐக்கிய நாடுகளின் தற்போதைய தூதரகப் பிரதிநிதி
திரு. கென்ட் மே

விளையாட்டு மற்றும்
மேம்பாட்டுத்துறையின் இயக்குநர், சிறப்பு சர்வதேச ஒலிம்பிக்ஸ், வாஷிங்டன் டி.சி
திரு. கிறிஸ்டியன் கிரால்ட்

நிறைவு விழா ஆகஸ்ட் 6 மாலை 5 மணி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம்
மதிப்பிற்குரிய இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
திரு. கிரண் ரிஜிஜூ

மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
திரு. செங்கோட்டையன்

இந்நிகழ்ச்சியை வழங்குபவர்கள் : எவோக் மீடியா

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் 2019 என்னும் இம்மாபெரும்
நிகழ்ச்சியை
வழங்குபவர்கள், சென்னையை சேர்ந்த பொழுதுபோக்கு, ஊடக மற்றும் தொடர்பியல் நிறுவனமான ‘எவோக் மீடியா’. மூளைசார் குறைபாடு உள்ளவர்களுக்காக சிறப்பு ஒலிம்பிக் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் SOIFC 2019 என்ற இந்த நிகழ்ச்சி, பாரத சிறப்பு ஒலிம்பிக்ஸ், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக்ஸ், மாவட்டத்திற்கான சர்வதேச அரிமா சங்கம் 324 A6 மற்றும் இளைஞர்நல மேம்பாட்டு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் கூட்டணியில் நடைபெறவிருக்கிறது. மேலும் தகவல்களுக்கு, specialolympicsifc2019.org என்ற தளத்தைக் காணவும்.

தொடர்புக்கு :
info@specialolympicsifc2019.org
உபாசனா : 9790821017
கார்த்திக் : 98402 45323
உமா : 9566007087

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*