தளபதி 64 இல் இணைந்த மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை   மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக தளபதி  விஜயுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இந்நிலையில்  இப்படத்தில் இளம் முன்னணி மலையாள  நடிகரான ஆண்டனி வர்கீஸ் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் 2017 இல் மலையாளத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான  அங்கமாலி டைரீஸ் என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமானார்  என்பது குறிப்பிடத்தக்கது .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*