நடிகர் சிவகுமாரின் கம்பராமாயணம் – மகாபாரத உரைகளை டிவி இல் பார்த்து YG மஹேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி எழுதிய கடிதம் !

ஒய்.ஜி மஹேந்திரனின் தயார் , ராஜலட்சுமி பார்த்தசாரதி தனது 93 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவர் இந்திய பத்திரிகையாளர், கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மேலும் பி.எஸ். பி. பி. குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவர் .

இந்நிலையில் நடிகர் சிவகுமார் கம்பராமாயணம் – மகாபாரத உரைகளை டிவி இல் பார்த்த YG மஹேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . அது பின்வருமாறு !

அன்புள்ள சிவகுமார் ,

”நீங்கள் ராமாயணத்தை கூறுவதையும் , விவரிப்பதையும் பார்த்த பிறகு, கலியுக கம்பனாக என் கண்களுக்கு நீங்கள் தெரிகிறீர்கள். வியாசர் மற்றும் ராஜாஜி இணைந்த அடுத்த கலியுக வியாசர் நீங்கள் என்று நான்  நம்புகிறேன். நீங்களும் மிகவும் சரளமாக மஹாபாரதத்தினை தமிழில் விவரிக்கிறீர்கள்.

மனப்பூர்வமாக உங்களை நான் எனது மூன்றாவது மகனாக பார்க்கிறேன். உங்களை போன்ற ஒரு வியத்தகு தமிழ் அறிஞரை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் மற்றும் உங்கள் மருமகள் ஜோதிகா ஆகியோர் உங்களை போலவே உங்களின் வழிகளை பின்பற்றி செல்வர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை.

அனைத்து மாநில பள்ளிகள், அனைத்து CBSE பள்ளிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ICSE பள்ளிகள் மற்றும் நம் நாடுகடந்த தலைமுறையினருக்கும் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பொக்கிஷங்களை பற்றி நீங்கள் நாடங்கங்களாக  விவரிக்க நான் கட்டாயமாக பரிந்துரைக்கிறேன்.

120 வயது வரை வாழ்ந்த ராமானுஜர் போல நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். மேலும்  தமிழ் கலாச்சாரத்தை நிலை நாட்டும் உங்களின் இந்த உன்னத சேவை நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*