“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” நகைச்சுவை பொழுதுபோக்கு படம்

ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
“எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு நடிகர் மற்றும்  தயாரிப்பாளராக ஜொலிக்க முடியும் என அவர் நம்புகிறார். ‘கனா’ ஒரு தீவிரமான எமோஷன் சார்ந்த திரைப்படம் என்றால், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஒரு முழுமையான நகைச்சுவை பொழுதுபோக்கு படம். படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து வருகிறோம்” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.
இந்த படத்தில் ரியோ ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ், ஷிரின் காஞ்ச்வாலா, புட் சட்னி ராஜ்மோகன், ராதாரவி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷபீர் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். எஸ். கமலநாதன் கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*