நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி – இயக்குநர் சங்கர் தர்பார் இசை வெளியீட்டு விழா

பாடல்கள் பிரமாதமாக உள்ளன, அனிருத்திற்கு வாழ்த்துக்கள். இசை விழாவின் நாயகன் அவர்தான் , அனிருத்திடம் முதல் டியூனே பெரும்பாலும் படத்தில் சரியாக பொருந்திவிடும் . இயக்குநருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முழு திருப்தி ஏற்படும் வரை இசையமைத்துக் கொடுப்பார் அனிருத் .

முருகதாஸ் சிறந்த எழுத்தாளர் . முருகதாஸ் படங்களில் இறுதிக் காட்சியில் எப்போதுமே அனல் தெறிக்கும் . இம்முறை ரஜினியும் இணைந்துள்ளார் .

ரஜினியிடன் இணைந்து பணி செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று கூட தினம்தோறும் படப்பிடிப்பின்போது ரஜினியை நினைத்துக் கொள்வேன் .

நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி . படப்பிடிப்பில் சரியான நேரத்திற்கு வந்து விடுவார் . நேரம் தவறாமை என்பது ரஜினியிடமிருந்து அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் .

‘சிவாஜி ‘ படப்படிப்பின்போது தண்டவாளத்தில் நாற்த்தில் இருந்து உணவைச் சாப்பிட்டார் ரஜினி. படப்பிடிப்பில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக கேரவானை தவிர்த்து தண்டவாளத்திலே அமர்ந்து சாப்பிட்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு காவலர் கதாபாத்திரத்தில் ரஜினியை பார்க்க இருக்கிறோம் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*