நேர் கொண்ட பார்வை – விமர்சனம்

கதை : பிங்க் படம் பார்த்தவர்களுக்கு தெரியும் தமிழில் அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே 30 நிமிட கூடுதல் காட்சிகள் ( குறிப்பு அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே அந்த காட்சிகள்)
 
கதை கரு : ஒரு பெண் முடியாது என கூறிவிட்டால் முடியாது என்பதே அர்த்தம் அதன் பின்பும் அவளை அடைய நினைப்பது வற்புறுத்துவது சட்டப்படி குற்றம் (குறிப்பு: மாடர்ன் டிரஸ் போட்ட பெண்கள் எல்லாம் தப்பானவர்கள் இல்லை)
 
அஜித் : தன்னுடைய மாஸ் இமேஜை ஒதுக்கி வைத்து விட்டு அருமையாக நடித்துள்ளார்.கோர்ட் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் தல ரசிகர்களுக்கு செம தீனி . இனிவரும் காலங்களிலும் அஜித் படங்கள் இப்படி தான் இருக்கும் என கோலிவுட் தகவல்
 
வசனங்கள் : யோசிச்சு நடக்கணும் நடந்திட்டே யோசிக்கக்கூடாது , பதில் சொல்லு , ஒருத்தவங்க மேல காட்டுற விசுவாசத்துக்காக மத்தவங்கள ஏன் அசிங்கப்படுத்துறீங்க , நெறைய நெறைய,No Means No,பொண்ணுங்கள மாத்தவேணாம் பசங்களைத்தான் திருத்தணும் ,
 
பாடல்கள் : ஓகே ரகம்
 
பின்னணி இசை : ஓகே ரகம் தான் (யுவன் சார் என்ன ஆச்சு)
 
இயக்கம் : H.வினோத் ரீமேக் படம்தான் என தெரிந்தும் இப்படத்தை இயக்க ஒத்துக்கொண்டது இப்படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. பிங்க் படத்தை அஜித் ரசிகர்களுக்கும் ஏற்றாற்போல் கொடுத்ததில் இன்னும் சிறப்பு (அடுத்த படம் இன்னும் எதிர்பாக்குறோம் சார்)
 
மொத்தத்தில் நேர்கொண்ட பார்வை அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் குடும்பமாய் சென்று பார்த்து வரக்கூடிய நல்ல மெசேஜ் உள்ள படம்
 
Dont Miss It Watch In theaters Only

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*