படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !

ஜீ வி பிரகாஷ் குமார்  நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் பரபரப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோலகலமாக நேற்று (செப்டம்பர் 30) துவங்கியது.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படம் பற்றி பகிர்ந்து கொண்டது…

படத்தை பற்றிய நல்ல மனங்களின் வாழ்த்து பரவிய சூழலில் நேற்று கொண்டாட்டத்துடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். படத்தின் முக்கிய பகுதிகளை இங்கு படமாக்கிவிட்டு மேலும் சில பகுதிகளை கோயம்புத்தூரில் தொடர உள்ளோம். ஆரம்பம் முதலே படத்தின் மீது நடிகர் ஜீ வி பிரகாஷ் கொண்டிருக்கும் ஆர்வம் பெரும் உற்சாகத்தை தருகிறது. அவராகவே மீண்டும் மீண்டும் பல டேக்குகளை கேட்டு நடிக்கிறார். நாங்கள் திருப்தியடைந்த போதிலும் அவர் டேக்குகள் கேட்டு நடிக்கிறார்.  படம் நன்றாக வர வேண்டும் என்பதில் அவர் பெரும் ஆர்வத்துடன்  இருக்கிறார்.
அவரது இந்த ஆர்வம்  மொத்த படக்குழுவையும் உற்சாகப்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் காட்சிகளை படமாக்கிய பிறகு பெங்களூரில் படத்தின் வேறு பகுதிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களின் வெகு இயல்பான காதலை, அப்பட்டமாக சொல்லக்கூடிய காதல் கதை தான் “பேச்சுலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாகவும் திவ்ய பாரதி நாயகியாகவும் நடிக்கிறார்கள். யூடியூப் நக்கலைட்ஸ் மூலம் பிரபலமான அருண்குமார் உட்பட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில்  நடிக்க உள்ளார்கள். ஜீ வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார். Axess Film Factory சார்பில் G டில்லி பாபு இப்படத்தினை தயாரிக்கிறார்.

 
Cast and Crew
 
Producer :  G. Dilli Babu
Company : Axess Film Factory
Director : Satish Selvakumar
Starring : GV Prakash
Music Director : GV Prakash
Cinematography :Theni Eshwar
Editing : San Lokesh

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*