Kayamkulam Kochunni – Review

கேரளாவின் முடிசூடா மன்னனாக 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டர்காரர்களிடமிருந்தும் ,சாதிவெறி பிடித்த பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். அவரை பற்றிய கதை தான் இந்த காயம்குளம் கொச்சுண்ணி திரைப்படம்

தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான ‘இத்திக்கர பக்கி’, கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்குளம் கொச்சுண்ணி, ஒரு சகாப்தமாக மக்கள் மனதில் எப்படி இடம்பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

காதலித்த பெண், களரி கற்றுக் கொடுத்த குரு, தெருவில் வருவோர் போவார் எனப் பாரபட்சம் இல்லாமல் துரோகம் இழைக்கின்றனர் நாயகனுக்கு. அவரும் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரகமாக இருப்பதோடு, அதிலிருந்து மீளும் திடச்சித்தனாயும் இருக்கிறார். எது நடந்தாலும், ஏழைகளுக்கு உதவுவதை மட்டும் கொச்சுண்ணி கதாபாத்திரத்தில் நினைவின் பாலி அசத்துகிறார்

கடவுளிண்ட தேசமான கேரள நிலப்பரப்பே, படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை அளிக்கிறது. ஜானகி பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். குறும்பு கொப்பளிக்கும், மிக நல்ல இளைஞனான கொச்சுண்ணியைச் சுற்றியே படத்தின் முதல் பாதி கதை நகர்கிறது. இடைவேளைக்கு முன், இத்திக்கர பக்கியாகப் புயலென அறிமுகமாகிறார் மோகன்லால்.

படத்தின் க்ளைமேக்ஸ் அதி அற்புதம். இதை விடச் சிறப்பான மரியாதையைக் காயங்குளம் கொச்சுண்ணிக்கு அளித்த விடமுடியாது.காட்சியமைப்பு, பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் ,உண்மைக்கதையை சொல்லும் போது சுவாரசியங்கள் இருந்தால் தான் ரசிப்பு இருக்கும் அது இதில் கொஞ்சம் குறைவாக இருப்பது குறையே

மொத்தத்தில் காயம்குளம் கொச்சுண்ணி அருமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*