THE ANGRY BIRDS MOVIE 2 -ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

Rovino Entertainment நிறுவனத்தின் வீடியோ கேம் series இன் மகத்தான வெற்றியை அடுத்து அதே பெயரில் The Angry Birds Movie , 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. Jon Vitti  திரைக்கதையை எழுத அறிமுக இயக்குனர்கள் Clay Kaytis மற்றும் Fergal Raiily ஆகிய இருவரும் இனைந்து படத்தை இயக்கி இருந்தனர்.

அப்படம் மிக அதிகமாக வசூல் செய்து $352 மில்லியன் சம்பாதித்து கொடுத்தது! வீடியோ கேம் -ஐ மய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் வசூல் வரலாற்றில் அப்படம் மூன்றாவது இடத்தை பெற்று புகழ் அடைந்தது!

Thurop Van Orman இன் நேர்த்தியான இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகம், The Angry Birds வீடியோ கேம் தொடங்கி 10 வது ஆண்டு நிறைவான இவ்வாண்டில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது!

Red, Chuck, Bomb மற்றும் இதர பறவை இனங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் வேளையில் , பன்றி இனத்தை சேர்ந்த ஒரு விலங்கினம், இந்த பறவை இனத்துடன் சேர்ந்து அவ்விரு இனத்தின் எதிரியான தீய குணம் கொண்ட ஒரு பன்றி இந தலைவனான King Mudbeard உடன் போரிட அறைகூவல் விடுக்கிறது ! இல்லாவிடில், இவ்விரு இனமும் பேராபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய ஒரு நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கை செய்கிறது!

மேலும், Zeta  எனப்படும் ஒரு விசித்திரமான பறவையும் கூட இவ்விரு இனங்களுக்கும் கெடுதல் செய்ய முனைகிறது!

கடும் கோபம் கொண்ட பறவை இனம், பன்றி இனத்தோடு இணைத்து, Zeta மற்றும் இதர எதிரிகளுடன் போரிட முற்படுவதுதான் மீதி கடையின் சாரம்!

Jason Sudeikis , Josh Gad , Danny McBride , Leslie Jones , Bill Hader , Rachal Bloom  மற்றும் Awkwafina ஆகியோர் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு தங்களது குரல் வளத்தை நல்கியுள்ளனர்.

Heitor Pereira, படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*