பாரதிராஜாவின் ‘குரங்கு பொம்மை’யை வாங்கிய யுவன் சங்கர் ராஜா!

தமிழ் சினிமாவுக்கு சிறிய இடைவெளிவிட்ட யுவன், இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், ‘யு 1 ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். புதிய இசையமைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் இசையை வாங்கி வெளியிடுகிறார்.

மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இசை உரிமையை வாங்கிய யுவன், அடுத்ததாக ‘குரங்கு பொம்மை’ படத்தின் இசையையும் வாங்கியுள்ளார். பாரதிராஜா, விதார்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நித்திலன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை. விரைவில் வெளியாகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*